சென்னையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நெல்லை & தூத்துக்குடி நாடார் சமூகத்தை ஒன்றிணைக்கிறோம்
கல்வி மூலம் மேம்படுத்துதல்
நெல்லை நாடார் பள்ளி & இராமசந்திரா பப்ளிக் ஸ்கூல் — அடுத்த தலைமுறையை வளர்க்கிறோம்
ஒன்றாக வாழ்க்கையை கட்டமைப்போம்
சமூக திறமையை சரியான வாய்ப்புகளுடன் இணைக்கிறோம்
நம்பகமான திருமண சேவை
நமது நம்பகமான சமூக வலையமைப்பில் உங்கள் வாழ்க்கைத் துணையைக் கண்டறியுங்கள்
நமது பாரம்பரியத்தை கொண்டாடுவோம்
சமூக கூட்டங்கள், கலாச்சார நிகழ்வுகள் & விழாக்கள் நம்மை ஒன்றிணைக்கின்றன
70+
சேவை ஆண்டுகள்
2
நடத்தப்படும் பள்ளிகள்
1000+
இணைக்கப்பட்ட குடும்பங்கள்
50+
ஆண்டுக்கான நிகழ்வுகள்
என்ன நடக்கிறது
சமூக நிகழ்வுகள்
உங்கள் சமூகத்தில் நடக்கும் சுவாரசியமான நிகழ்வுகளை கண்டறிந்து சேருங்கள்
எங்கள் கதை
எங்கள் சங்கத்தைப் பற்றி
இந்திய திருநாட்டில், செந்தமிழ் ஆட்சி புரியும் தமிழகத்தில், சத்திரிய குலத்தவரான சேர, சோழ, பாண்டிய வம்சத்தினராக, சென்னை. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்ற, நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட நாடார் பெருங்குடி மக்களுக்காக, தலைநகர் சென்னையில், நெல்லை தூத்துக்குடி நாடார் மகமை பரிபாலன சங்கம் என்ற பெயருடன் 70-ஆண்டுகளுக்கு முன்னதாக, திருச்செந்தூர், சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம் தாலுக்காவை பூர்வீகமாக கொண்ட வர்த்தகம் செய்யும் நாடார்களால் சென்னை, மயிலாப்பூர், ஆமில்டன் வாராவதியில் 1954-ல் துவங்கப்பட்டு, திரு.கல்கண்டு நாடார் என்று அழைக்கப்பட்ட திரு. D.லட்சுமண நாடார் இல்லத்தில் சங்கம் நடத்தப்பட்டு வந்தது.
நமது சங்கத்தை தோற்றுவித்து, நமது நினைவில் என்றென்றும் நீங்காது இருக்கும் பெரியோர்கள் திரு. N. சித்தாண்டி நாடார், திரு. P. சிதம்பர நாடார், திரு. D. நடேசன் நாடார், திரு. A.லட்சுமண சுயம்பு லிங்க நாடார், திரு.A.பால்பாண்டி நாடார், திரு.S.சுப்ரமணிய நாடார், திரு. R.S. முத்துபாண்டிய நாடார் ஆகியோருடன் சங்கத்தின் முதல் நிர்வாக சபையின், முதல் தலைவராக, புரசைவாக்கம் திரு. P. ராஜகோபால் நாடார், உப தலைவர்களாக, மயிலாப்பூர் திரு. A.லட்சுமண சுயம்புலிங்க நாடார், பெரம்பூர் திரு. T. ஆண்டியப்ப நாடார், காரியதரிசிகளாக திரு. நா. சித்தாண்டி நாடார். மயிலாப்பூர் திரு.S. இராமச்சந்திர நாடார், பொருளாளர் மயிலாப்பூர் திரு. K.பரமசிவம் நாடார், மற்றும் நிர்வாகக் கமிட்டி உறுப்பினர்களாக மயிலாப்பூர் திரு. D.நடேசன் நாடார், மயிலாப்பூர் திரு. S.சுப்பிரமணிய நாடார், மயிலாப்பூர் திரு. V.P. மாணிக்க நாடார், மயிலாப்பூர் திரு. A.பால் பாண்டியன் நாடார், மயிலாப்பூர் திரு.A.வைத்தியலிங்க நாடார். வண்ணாரப்பேட்டை திரு.K.கணேசன் நாடார், தண்டையார்பேட்டை திரு. S.V.சிவலிங்க நாடார், ஓட்டேரி திரு. A.தவசிப் பெருமாள் நாடார், வண்ணாரப்பேட்டை திரு. K.T.ஜானகிராம் நாடார், அமைந்தகரை திரு. K. ராமசாமி நாடார், அயன்புரம் திரு. T.S.செல்லச்சாமி நாடார், நுங்கம்பாக்கம் திரு. V. சங்கர நாராயணன் நாடார், கோடம்பாக்கம் திரு. R.S.தங்கவேல் நாடார், பழைய மாம்பலம் திரு. P.S.T.வேலன் நாடார், மாம்பலம் திரு. S.சிதம்பரம் நாடார், சைதாப்பேட்டை திரு. M. காசி நாடார், சைதாப்பேட்டை திரு. E.ராமகிருஷ்ண நாடார்,திரு. N. சண்முகக்கனி நாடார் ஆயிரம் விளக்கு திரு. T.சிவந்திக்கனி நாடார். ஆழ்வார்பேட்டை திரு. A.பொன்னுச்சாமி நாடார். இராயப்பேட்டை திரு. V. மந்திரம் நாடார், கிருஷ்ணாம்பேட்டை, திரு. A. ராமலிங்க நாடார், திரு. V. ரத்தினசாமி நாடார், பெரம்பூர் திரு. A.அரிகிருஷ்ணன் நாடார், திருவல்லிக்கேணி, திரு. R.S.முத்துப் பாண்டியன் நாடார் ஆகியோர்கள் செயல்பட்டு வந்தார்கள். அதன் பின்பு சங்கத்தின் தலைவர்களாக திரு.T.ஆண்டியப்ப நாடார், திரு. K.T.ஜானகிராம் நாடார். திரு.K.பரமசிவ நாடார்,திரு. N.நவமணி நாடார், திரு.S.இராமச்சந்திர நாடார். மயிலை திரு.C.பெரியசாமி நாடார் மற்றும் திரு. V.T.பத்மநாபன் நாடார் ஆகியோர் திறம்பட செயல்பட்டார்கள்.
இடையில் சில நாட்கள் பொறுப்புத் தலைவராக திரு M.R.R.குணசீலன் அவர்கள் செயல்பட்டார். சங்கத்தின் நிர்வாக செயலாளர்களாக திரு. நா. சித்தாண்டி நாடார், திரு. A. பால்பாண்டியன் நாடார், திரு. V.P. மாணிக்க நாடார், திரு. V. கனி நாடார், திரு.K.இராமநாதன் நாடார், திரு. L.ராம்சிங் நாடார், திரு.V.கிருஷ்ண பாண்டியன் நாடார், திரு. S.இராஜ பாண்டியன் நாடார், திரு.A.E.இராமஜெயம் நாடார், திரு.M.தினகரன் நாடார், திரு. T.S.இராமச்சந்திர மார்த்தாண்டன் நாடார், திரு. V.T.பத்மநாபன் நாடார், திரு. மயிலை C. பெரியசாமி நாடார், திரு. R.சந்திரன் ஜெயபால் நாடார், ஆகியோர் செயல்பட்டார்கள். சங்கத்தின் பொருளாளர்களாக திரு. R.S.முத்துப்பாண்டியன் நாடார், திரு. ப.சிதம்பர நாடார், திரு. A.நரசிங்க மூர்த்தி நாடார், திரு.A.G.ராஜாமணி நாடார், திரு. A.தனபால் ராஜ் நாடார், திரு.V.ரெத்தினசாமி நாடார், திரு.S.K.இராஜபாண்டியன் நாடார். திரு.N.G.ஞானேஸ்வரன் நாடார், திரு. S.ராம பாண்டியன் நாடார், திரு. D. நடேசன் நாடார், திரு. N.D.பிச்சை நாடார், திரு. P.S.முத்து நாடார், திரு. V.P. மலைதாங்கும் பெருமாள் நாடார், திரு. T.தாமஸ் நாடார்,திரு. M. தினகரன் நாடார், திரு.த.வெள்ளையன் நாடார், திரு.A. ராஜ்பால் நாடார், திரு. R. சந்திரன் ஜெயபால் நாடார், திரு. A.A. முருகேசன் நாடார், திரு. M. மாரித்தங்கம் நாடார் ஆகியோரது பணியினை நாம் என்றென்றும் மறக்க முடியாது. நமது சங்கத்தின் அலுவலகம் அமைக்க, சென்னையின் முக்கியப் பகுதியான எழும்பூரில் திரு. K.T.ஜானகிராம் நாடார் அவர்கள் நிர்வாகத்தின் போது நிலம் வாங்கப்பட்டது.
மேற்கொண்டு திரு.K.பரமசிவ நாடார் அவர்களது தலைமையில் பெருமதிப்பிற்குரிய திரு K.T. கோசல்ராம் அவர்களது முன்னிலையில் சங்க கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டு திரு. S.இராமச்சந்திர நாடார் அவர்களது தலைமையில் கட்டிடம் கட்டப்பட்டு, மாவட்ட நீதிபதி திரு. S.கணேசன் M.A.B.L., அவர்களது தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. தற்போது புதிதாக 5 மாடி அடுக்கு கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. திரு. S.இராஜபாண்டியன் அவர்களும், ஆலந்தூர் திரு.A.S.L. இராஜன் அவர்களும், நமது சங்கத்தில் அவர்கள் இருவரது புகைப்படம் வைப்பதற்கு, நன்கொடையாக அளித்த, இரண்டு கிரவுண்டு இடம் மடிப்பாக்கத்தில் உள்ளது. நமது சங்கத்தின் மூலமாக, சென்னையை அடுத்துள்ள கொட்டிவாக்கத்தில் திரு. S. இராமச்சந்திர நாடார் அவர்கள் நிர்வாகத்தின் போது நிலம் வாங்கப்பட்டது. அதில் நெல்லை நாடார் மெட்ரிகுலேசன் ஹையர் செகண்டரி ஸ்கூல் மற்றும் இராமசந்திரா பப்ளிக் ஸ்கூல் (CBSE) ஆகிய இரண்டு பள்ளிகளையும் அமைத்துச் சிறப்புடன் நடத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள்.
சமுதாய முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு வந்தவரும் சமுதாய மக்களுக்கு நடமாடும் காவல் நிலையமாக இருந்த S.R.அண்ணாச்சி என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட இறைதிரு S. இராமச்சந்திர நாடார் அவர்களின் சேவையை, நாம் என்றென்றும் நினைவு கூறும் வகையில் அவரது முழு உருவ வெண்கலச் சிலை அன்றைய பாண்டிச்சேரி முதல்வர் திரு. N.ரெங்கசாமி அவர்களால் சங்கத்தின் 50-வது பொன்விழா அன்று அன்றைய தலைவர் மயிலை C. பெரியசாமி நாடார் அவர்களது தலைமையில் திறக்கப்பட்டு சங்கத்தின் முன் நிறுவப்பட்டுள்ளது.